தற்சமயம் வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் அர்ஜுன் மகேந்திரன் போன்று தப்பியோடிவிடக் கூடும் என பெருமளவு பிரச்சாரங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ரிசாத் பதியுதீன் உத்தியோகபூர்வ விஜயம் நிமித்தமே வெளிநாடு சென்றுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடுகள் எதுவும் இல்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், பொலிசில் முறைப்பாடு இருப்பின் அமைச்சர் என்பதற்காக அவர் தப்ப முடியாது எனவும் அவரையும் கைது செய்து பொலிசார் விசாரணை நடாத்துவர் எனவும் அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தான் அரச உயர் மட்டத்திற்கு அறிவித்து விட்டே வெளிநாடு சென்றதாக ரிசாத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment