இலங்கையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் பாகிஸ்தானுடனான வர்த்தக நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக இலங்கை-பாக் வர்த்தக பேரவையின் தலைவர் அஸ்லம் பஹாலி தெரிவித்துள்ளார்.
அரிசி மற்றும் ஆடை இறக்குமதி முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ள அதேவேளை உருளைக்கிழங்கு இறக்குமதியும் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் பெரும்பாலும் இவ்வர்த்தக நடவடிக்கைகள் முஸ்லிம்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்சமயம் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் ஸ்தம்பித்துப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானிலிருந்து ஏலவே தருவிக்கப்பட்ட பொருட்களை துறைமுகத்திலிருந்து எடுத்துச் செல்வதற்கும் இறக்குமதியாளர்கள் முன் வர மறுப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment