சட்ட - ஒழுங்கு அமைச்சுதான் வேண்டும்: பொன்சேகா அடம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 11 May 2019

சட்ட - ஒழுங்கு அமைச்சுதான் வேண்டும்: பொன்சேகா அடம்!



சட்ட - ஒழுங்கு அமைச்சைத் தவிர, வேறு எந்த அமைச்சுப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.


இதேவேளை, பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்ற போது தான் சட்ட-ஒழுங்குக்குப் பொறுப்பாகவிருந்திருந்தால் இந்நேரம் இராஜினாமா செய்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார் ரஞ்சித் மத்தும பண்டார.

தனக்கு அமைச்சுப் பதவியொன்றைத் தந்து அதனூடாக பாதுகாப்பு கவுன்சிலில் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சியே இடம்பெறுவதாகவும் தான் அதற்குத் தயார் இல்லையெனவும் தெரிவித்துள்ள பொன்சேகா, சட்ட - ஒழுங்கு அமைச்சைப் பொறுப்பேற்று நடாத்தும் முழுத் தகுதியும் தமக்கு இருப்பதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment