நீர்கொழும்பில் நேற்றைய தினம் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைத்தாக்குதல்களில் சேதமுற்ற தனியார் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கான இழப்பீட்டை வழங்க நடவடிக்கையெடுத்துள்ளதாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
நேற்றைய அசாதாரண சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதோடு இரு தரப்பு மோதலாகவே நேற்றைய சம்பவம் சித்தரிக்கப்படுகிறது. எனினும், நீண்டகால இலக்காக இருந்த இடங்களே இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment