சிலாபம் பகுதியில் தேவாலயம் ஒன்றைத் தாக்கி, வழிபாட்டுக்குச் சென்றிருந்த கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நகைகள் கொள்ளையிடப்பட்ட (2010) சம்பவத்தின் பின்னணியிலான வழக்கிலிருந்து ஞானசார மற்றும் 13 சகாக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கிலிருந்து ஞானசார கும்பல் விடுவிக்கப்படுவதற்கு எதிராக கடந்த வருடம் சட்டமா அதிபர் தெரிவித்திருந்த ஆட்சேபனையையடுத்தே இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமது ஆட்சேபனையை சட்டமா அதிபர் விலக்கிக் கொண்டுள்ளதையடுத்து ஞானசார கும்பலுக்கு விடுதலை கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment