ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் புதிதாக ஒரு நபரைத் தேடி வருவதாகவும் குறித்த நபர் பற்றி தகவல் அறிந்தவர்கள் பொலிசாரைத் தொடர்புகொள்ளும்படியும் அறிவித்துள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
35-40 வயதுக்கிடைப்பட்ட குறித்த நபரே இறுதியாக கொழும்பு கொச்சிக்கடையில் பாதுகாப்பு படையினரால் வெடிக்கச் செய்யப்பட்ட வேனைக் கொள்வனவு செய்யவும், தேவைக்கேற்ப வகையில் மாற்றியமைக்கவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் 011 24 22 176 / 011 23 92 900 ஆகிய இலக்கங்கள் ஊடாக தகவல் வழங்க முடியும்.
இதேவேளை, நீர்கொழும்பில் ஆரம்பித்து குருநாகல் மற்றும் மீண்டும் மினுவங்கொட வரை ஏராளமான பேரினவாதிகள் இணைந்து ஊரடங்கு சட்டங்களையும் மீறி முஸ்லிமகளின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment