இலங்கையில் இடம்பெற்று வரும் தொடர் வன்முறைகளின் பின்னணியில் பல நாடுகள் தமது நாட்டு பிரஜைகளை இலங்கைக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளன.
இந்நிலையில், தற்போது அனைத்தும் சுமுகமாகிவிட்டதாகவும் இப்பிரயாணத்தடையை நீக்க வேண்டும் எனவும் இலங்கையில் இயங்கும் வெளிநாட்டுத் தூதரகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
மே மாதம் 12-13ம் திகதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அரச உயர்மட்டம் கண்டிக்கத் தவறியுள்ள அதேவேளை முஸ்லிம்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றமையும் மௌலுது புத்தகங்கள், அல்-குர்ஆன் பிரதிகளை வைத்திருப்பதற்காகவும் கைது செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment