மறைத்து வைக்கப்பட்டிருந்த 'வெடிகுண்டுகளை' மீட்டு விட்டோம்: பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Monday, 6 May 2019

மறைத்து வைக்கப்பட்டிருந்த 'வெடிகுண்டுகளை' மீட்டு விட்டோம்: பொலிஸ்!


சஹ்ரானின் தீவிரவாத குழுவினர் எதிர்கால பாவனைக்காக ஆங்காங்கு மறைத்து வைத்திருந்த அனைத்து வெடி குண்டுகள், வெடிபொருட்களையும் மீட்டுவிட்டதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.



ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட குழுவில் இருந்த ஹஸ்தும் என்ற நபரே வெடிகுண்டு தயாரித்தலில் நிபுணத்துவத்தை பெற்றிருந்ததாக நம்பப்படுகின்ற நிலையில் குறித்த நபர் உட்பட அனைத்து முக்கிய புள்ளிகளும் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சில புள்ளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் அதிபர் சி.டி. விக்ரமரத்ன தெரிவிக்கிறார்.

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இப்ராஹிம் சகோதரர்களும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment