நீர்கொழும்பில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து அப்பகுதியில் குடியிருக்கும் பாகிஸ்தானிய அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதில் ஒரு பகுதியாக குறிப்பிட்ட எண்ணிக்கையானோரை அம்பலாந்தொட்டயில் அரச புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசத்தில் இன்று வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கருப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
அகதிகளின் வரவு பிரதேசத்தில் பதற்றத்தைத் தோற்றுவித்து ஒற்றுமையைக் குலைத்து விடும் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment