குருநாகல பகுதியில் தொடர்ந்தும் இனவாத அச்சம் மேலோங்கியுள்ளதோடு சிறிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் காட்டுப்பகுதிகளுக்குள் ஒளிந்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கு அமுலில் உள்ள போதிலும் பல இடங்களில் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை கைது செய்பவர்களை விடுவிக்கக் கோரி வன்முறையாளர்களே ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி சீனா சென்றுள்ள அதேவேளை ருவன் விஜேவர்தன கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அளுத்கம, கிந்தொட்ட, திகன போன்று இம்முறையும் நீர்கொழுப்பு, சிலாபம், குருநாகல் வரை இனவாத சூழ்நிலையில் மக்கள் அச்சத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment