வன்முறைகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் விபரீதமாகும்: ஜனாதிபதிக்கு தகவல் - sonakar.com

Post Top Ad

Monday, 13 May 2019

வன்முறைகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் விபரீதமாகும்: ஜனாதிபதிக்கு தகவல்


இலங்கையில் 95 வீதத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் ஒன்றி வாழ்கின்ற நிலையில் சிறு தீவிரவாத குழுவின் செயற்பாட்டின் விளைவினை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறையாக திரும்புவதை அனுமதிப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என அறிவுரை வழங்கியுள்ளார் சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க.



முஸ்லிம் சமூகம் தனிமைப்படுத்தப்படாது சகஜமான வாழ்வைக் கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதே நாட்டின் நிலையான சமாதானத்தை உறுதிப்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1.9 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்ற அதேவேளை தெற்காசிய பிராந்தியத்தில் 600 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் அரசாங்கம் முஸ்லிம் சமூகம் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment