அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளது கூட்டு எதிர்க்கட்சி.
66 பேரின் கையொப்பத்துடன் கையளிக்கப்பட்டுள்ள குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மஹிந்த அணி முழு ஆதரவை வழங்கியுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இது தொடர்பில் தீர்மானிக்கவில்லையென நேற்றைய தினம் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment