நீர்கொழும்பு வன்முறை: இருவர் கைது! - sonakar.com

Post Top Ad

Monday, 6 May 2019

நீர்கொழும்பு வன்முறை: இருவர் கைது!


நீர்கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல்களின் பின்னணியில் இருவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.



இரு தரப்புக்கிடையிலான குழு மோதலே அசம்பாவிதத்தின் அடிப்படையென தெரிவிக்கின்ற பொலிசார், சில வீடுகளும் - வாகனங்களும் சேதப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.

இந்நிலையில் இன்றைய தினம் அங்கு விஜயம் செய்த கார்டினல் மல்கம் ரஞ்சித், கிறிஸ்தவ சமூகத்தை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், முஸ்லிம் சமூகமும் பொறுமையாக இருக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலை ரிஸ்வி முப்தி வேண்டிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment