ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஜனாதிபதிக்கு முன் கூட்டியே தகவல் தெரியும் என வெளியான தகவலை ஐந்து வாரங்களின் பின் மறுதலித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
தனது ஊடகப் பிரிவின் அறிக்கையூடாகவே ஜனாதிபதி இவ்வாறு மறுத்துள்ளதுடன் ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து எவ்விதமான உளவுத் தகவல்களும் தனக்கு வழங்கப்படவில்லையென தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி வெளிநாடு சென்றிருந்தமையும் பின்னர் மே 12-13ம் திகதி தாக்குதல்களின் போதும் ஜனாதிபதி வெளிநாடு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment