இலங்கையில் இடம்பெற்ற ஐ.எஸ். தாக்குதல்களையடுத்து அமெரிக்க இராணுவம் இங்கு கால் பதிக்கப் போவதாக எதிர்க்கட்சியினர் அச்சம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். பற்றிய புலனாய்வு விவகாரங்களில் அமெரிக்காவுக்கு நிறைந்த அனுபவம் உள்ளதென்றும் அதன் பின்னணியில் அமெரிக்காவின் உதவி பெறப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், ஈஸ்டர் தாக்குதல் ஊடாக இலங்கையை இன்னுமொரு சிரியா அல்லது லிபாயா ஆக்குவதற்கு திட்டம் தீட்டப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டு வருகின்ற அதேவேளை முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட வன்முறைகள் மீண்டும் ஒரு தடவை அரங்கேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment