அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 22 May 2019

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிப்பு



நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



நாட்டில் நிலவும் அவசர சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தனக்கிருக்கும் அதிகார வரையறைக்குட்பட்டு இவ்வாறு இன்று முதல் ஒரு மாத காலத்துக்கு அவசர கால சட்டத்தை நீட்டிப்பதாக ஜனாதிபதி சுற்றுநிரூபம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் அடுத்து எதிர்பார்க்கப்படும் இரு தேர்தல்களையும் நடாத்தக் கிடைத்தால் அது பெரும் வெற்றியென அண்மையில் லண்டனில் வைத்து பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment