இலங்கையில் அமைதியாக வாழ்ந்த முஸ்லிம் சமூகம் தமக்குள் வளர்ந்து வந்த அரபு மயமாக்கலை அவதானிக்கத் தவறி விட்டதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் கபீர் ஹாஷிம்.
இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்திருந்த அதேவேளை, முஸ்லிம் சமூகத்துக்குள் இருந்து தீவிரவாதிகள் உருவானமை குறித்து கவலையடைந்துள்ளதாகவும் ஒரு போதும் இதனை எதிர்பார்க்கவில்லையெனவும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, முஸ்லிம் சமூகத்திலிருந்து இன்னும் ஒரு நபரேனும் தீவிரவாத வழிக்குச் சென்றால் அது ஒட்டு மொத்த சமூகத்தின் தோல்வியென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment