தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சுயாதீனமாக விசாரணை செய்ய அனுமதிக்கும் வகையில் ரிசாத் பதியுதீன் உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் சம்பிக்க ரணவக்க.
ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கிரிமினல் குற்றச்சாட்டுகள் என்பதால் நாடாளுமன்ற தெரிவுக்குழு அதனை விசாரிக்க முடியாது எனவும் அதனால் சுயாதீன விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் அவர் பதவி விலக வேண்டும் எனவும் சம்பிக்க தெரிவிக்கிறார்.
அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் துரிதப்படுத்தப்படுவதுடன் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பெறுபேறுகளை விரைவில் நாடறியச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment