இலங்கை வந்தடைந்த பலஸ்தீன நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் திருப்பியனுப்பிய சம்பவம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
ரமதான் ஹாசிம் எனும் பெயர் கொண்ட 45 வயது நபர் ஒருவரே இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாகவும் குறித்த நபரிடம் விசாரிக்கப்பட்டபோது வழங்கப்பட்ட தகவல்களில் அதிருப்தி கண்ட நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு கல்வி கற்க வந்த நிலையில் இலங்கையைச் சுற்றிப் பார்க்க வந்ததாக குறித்த நபர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment