மினுவங்கொட பகுதியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் பாலமொன்றில் கோட்டாபேயின் சகா மது மாதவ காணப்பட்டிருந்தது பற்றி தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், அதனை ஏற்றுக்கொண்டுள்ள மதுமாதவ, தான் அங்கு வன்முறையைத் தூண்டச் செல்லவில்லையெனவும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் இறங்கி நடந்து சென்று பொலிசாரிடம் விசாரித்ததாகவம் 'விளக்கம்' அளித்துள்ளார்.
ஏலவே, குளியாபிட்டி வன்முறைகள் குடிபோதையில் இருந்தவர்களால் நடாத்தப்பட்டது என ஸ்ரீலங்கா பொலிசார் 'விளக்கமளித்துள்ளமை'யும் இதன் பின்னணியில் மத்திய மாகாணத்தில் மது பான சாலைகள் ஒரு வாரம் பூட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment