அண்மைய வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிவாசல்களுக்கும் ஈஸ்டர் தினம் தாக்குதலுக்குள்ளான தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டது போன்று இழப்பீட்டை வழங்க அமைச்சரவை இணக்கம் கண்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக மே மாதம் 12-13ம் திகதிகளில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட வன்முறைகளில் சுமார் 30 கிராமங்கள் பாதிக்கப்பட்டிருந்ததோடு பல பள்ளிவாசல்கள் முற்றாக சேதப்படுத்திருந்தன. இந்நிலையிலேயே இவ்வாறு இழப்பீடு தருவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
அண்மைய தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்கள் புனர் நிர்மாணப் பணிக்கு 25 மில்லியன் ரூபா ஏலவே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment