இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வருடாந்தம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வரும் வன்முறைகளை எதிர்த்து கனடா, டொரொன்டோ நகரில் 19ம் திகதி ஞாயிறு அங்கு வாழும் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை முஸ்லிம் சமூக ஐக்கிய அமைப்பின் (USLMCC) ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்களை எரியூட்டுவதை நிறுத்து, சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாதத்தை நிறுத்து போன்ற கோசங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, மேலும் பல நாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையும் ஐக்கிய இராச்சியத்தில் குழப்ப நிலை தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment