கடந்த ஞாயிறு முதல் இனவாதிகளின் இலக்காகவும் சிறிது பதற்றத்துடனும் காணப்பட்ட ஆட்டோ தரிப்பிடம் ஒன்றிலேயே இன்றைய நீர்கொழும்பு அசம்பாவிதம் ஆரம்பித்துள்ளதாக தகவல் அறியமுடிகிறது.
பலகத்துறை, பீச் ரோட், அல்-பலாஹ் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் சில காலமாக நிலவி வந்த போட்டி - பொறாமை காரணமாக இப்பகுதியில் அவ்வப்போது சிறு முறுகல்கள் ஏற்பட்டு வந்திருப்பதோடு பள்ளிவாசலுக்கு எதிராகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பெரியமுல்ல சேன பிரதேசத்திலும் வீடுகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றமை யும் பலகத்துறை பள்ளிவாசல்களில் ஏலவே பாதுகாப்பு படையினர் 24 மணி நேர கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment