நீர் கொழும்பு பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகவும் பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சில இடங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த போதிலும் பெரும்பாலான இடங்களில் தற்சமயம் அமைதி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை காலை சமய தலைமைகளை வரவழைத்து சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment