இலங்கையில் இடம்பெறும் தீவிரவாத பிரச்சினைகள் மைத்ரிபால சிறிசேனவின் கூட்டு நாடகம் என குற்றஞ்சாட்டியுள்ளார் பொது ஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி.
நேற்றிரவு (18) பொதுஜன பெரமுனவின் ஐக்கிய இராச்சிய கிளையினர் , லண்டனில் நடாத்திய கட்சி உறுப்பினர்கள் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், அவசரகால சட்டத்தையும் நாட்டின் நிலைமையையும் காரணங் காட்டி, காபந்து அரசொன்றை அமைப்பதுவே திட்டம் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை எப்பாடு பட்டேனும் நடாத்துவதற்குப் போராட வேண்டியுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளரும் சேர்ந்த நாடகமாடுவதாகவும் பவித்ரா மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment