கெலிஓயா, கலுகமுவ பகுதி மஹாவெலி கங்கையில் விசேட தேடலில் ஈடுபட்ட பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து கூரிய ஆயுதங்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் கைதாகியுள்ள சந்தேக நபரின் வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இத்தேடல் நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக வாள்கள், கத்திகளை பொலிசார் மீட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment