அத்தனகல, அலவல பகுதியில் முஸ்லிம் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் இது தீவிரவாதிகளின் செயல் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த காலங்களில் குறித்த பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்துக்குள் காணப்படும் அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து இந்நபர் தமக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் அப்பின்னணியிலேயே இது தீவிரவாதிகளின் செயல் என தாம் சந்தேகிப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தனது செயலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியதும் தீவிரவாதிகளே என அண்மையில் அமைச்சர் கபீர் ஹாஷிமும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment