இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளோடு தொடர்பு கொண்டவர்கள், தீவிரவாதிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் பட்டியலை வெளிநாட்டுத் தூதரகங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளன.
குறித்த நபர்கள் தமது நாடுகளுக்கு விசா பெறுவதைத் தடுக்கும் நிமித்தம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.
இதேவேளை, தற்போது வெளிநாடுகளில் தங்கியிருந்து இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், அதற்கு ஆதரவளிப்போர் பற்றியும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment