எமது நாட்டில் இந்த தீவிரவாதச் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மிக சொற்பமான அடிப்படைவாதிகளே. இந்த நாட்டில் முஸ்லிம்கள் 22 இலட்சம் மக்கள் உள்ளனர். இதில் நூற்றுக்கு தசம் ஒன்று கூட இல்லை. இந்த அடிப்படை வாதம் வளர்ச்சிக்கான முக்கிய காரணம் சமூக வலைத்தளங்களாகும். இதனை சமூகத்தினர் தான் இல்லாற் செய்ய வேண்டும். வீட்டில் அடிப்படைவாதி இருப்பாராயின் அதற்கு அனுமதியளிக்க வேண்டாம். தமக்கு முடிந்தளவில் தடுப்பதற்கு வழி வகை செய்ய வேண்டும். இப்படியான வெட்சப் செய்திகளைக் கண்டால் தாம் பார்க்கா விட்டாலும் இன்னொருவருக்கு பகிர்ந்தால் அதன் மூலம் அவர்கள் பாதிக்கப்படலாம். எனவே இதனை நாங்கள் முற்றாக நிறுத்த வேண்டும் என்று கண்டி மாத்தளை மாவட்ட இராணுவப் பொறுப்பதிகாரி லெப்டினல் கேனல் டப்லியூ. எம். பி, டப்லியூ அலுவிஹார தெரிவித்தார்.
அக்குறணை ஜம்மிய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் அக்குறணை பிரதேசத்தின் பாதுகாப்புத் தொடர்பாக அக்குறணை நகரிலுள்ள பள்ளிவாசல்களின் பிரதான நிருவாகி மத்தியில் விளக்கமளிக்கும் நிகழ்வு அக்குறணை அஸ்னா ஜும்ஆப் பள்ளிவாசல் கேட்போர் கூடத்தில் தலைவர் அஷ;nஷய்க் எம். ஏ. எம். சியாம் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் கண்டி மாத்தளை மாவட்ட இராணுவப் பொறுப்பதிகாரி லெப்டினல் கேனல் டப்லியூ. எம். பி, டப்லியூ அலுவிஹார தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்.
தமது சமூகத்திற்குள் முரண்பாடாக செயற்படுபவர்கள் தமது சமயத்துக்குள் மார்க்க வழிமுறைகளைளுக்கு எதிராகச் செயற்படுபவர்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் தான் மிகவும் மோசமானவர்கள். இவர்கள் பற்றி அறிந்திருந்தால் பொலிஸாருக்கு தெரியப்படுத்தல் அவசியமாகும். தற்போதுள்ள நிலையில் எந்த மனிதனையும் முழு நம்பிக்கையுடன் பார்க்க முடியாது. சற்று சந்தேகத்துடன் பார்த்தல் வேண்டும். நாம் எப்படிப் பழகினாலும் மனதில் கொஞ்சம் சந்தேகம் வைத்துப் பார்க்க வேண்டும். நமக்கு பார்க்கும் போது எல்லாம் நல்லம் என்று தான் தோன்றும். ஆனால் அவர் பின்னால் உள்ள விசயங்கள் எமக்குத் தெரியாது. அவர் பின்னால் வந்து குத்துப் போதுதான் விசயங்கள் தெரிய வரும். கொஞ்சம் சந்தேகத்துடன் பார்ப்போமாயின் எந்தப் விடயத்தையும் அவதானமாக கையாயலாம்.
இவை போன்று தான் 1986, 1987 ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகள் இருந்தன. அது கூட தீவிரவாதச் செயற்பாடாகவே ஆகும். இரு வகுப்புவாத ரீதியிலான முரண்பாடாகும் . அரச நிர்வாக ஆட்சி முறை சமூகத்திற்குப் பிழையானது சுட்டிக் காட்டி தீவிரவாதச் செயற்பாட்டில் ஈடுபட்டனர். இதில் மிகவும் நன்றாகப் படித்த பல்கலைக்கழக மட்ட மாணவர்கள் ஈடுபட்டனர். அவர்கள் வேறாக வகுப்புக்களை நடத்தினர்கள். வேறாகப் பயிற்சி நடத்தினார்கள். இது எவ்வாறு இல்லாமற் செய்யப்பட்டது. இது எவ்வாறு இல்லாமற் செய்யப்பட்டது. இதற்கு முழுமையான சிங்களவர்கள் தொடர்புடையவர்களாக இருந்தார்கள். இதனை சிங்கள சமூகம் அடையாளம் கண்டு கொண்டார்கள். முதலில் வீடுகளில் தான் அடையாளம் கண்டார்கள். வீட்டிலுள்ள தந்தை தான் இப்படியான செயற்பாடுகளில் இறங்க வேண்டாம். இது பற்றி தெளிவை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தினாhர். முதியோர்கள் நட்பு ரீதியாக பழகி நிறுத்தினார்கள். எனினும் இப்படி நிறுத்தாமல் தொடர்ந்து சென்று ஆயுத பாவனையில் ஈடுபட்டவர்களை அயலவர்கள் நிறுத்தினார்கள். அதுவும் கேட்காமல் சென்றவர்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டார்கள். யார் சரி அடிப்படைவாதிகள்மூளைச் சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்ற முனைவார்கள். இதற்கு முதலில் வீட்டிலுள்ளவர்கள் தான் கவனம் எடுக்க வேண்டும். தமது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். தம் சகோதரர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அடுத்து முஸ்லிம் சமூகத்தினர் பார்க்க வேண்டும். இவர்களை பொலிஸாருக்குச் சொல்வதை விட சமூக அமைப்பினர் அவர்களுடைய பிழைகளை திருத்தி வழிநடத்த முடியும். அது தம்மால் முடியவில்லை என்றால் மட்டும் தான் அவர் வேறு வழியில் செல்கின்றார். அவரைப் பற்றி பொலிஸாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு கூற வேண்டும்.
தற்போது வந்து நவீன தொழில் நுட்பங்களான கையடக்கத் தொலை பேசி, இணையத்தளம் என்பவை எல்லாம் வந்தவையினால் மனிதர்களுக்கிடையே காணப்பட்ட தொடர்புகள் இல்லாமற் போயிற்று. குடும்ப மட்டத்தில் இந்த வேலைத் திட்டத்தை எடுத்தால் மிகவும் பிரயோசனம் அளிக்கும்.
மக்களும் ஒன்றுமையுடன் மிகவும் சந்தோசமாக வாழ்ந்தனர். உலகில் கூட ஒரு நாடு இல்லாதவாறு எமது நாடு மிக அமைதியாக இருந்தது. எந்த தீவிரவாதச் செயற்பாட்டை இல்லாமற் செய்வதற்கு எல்லா விடயத்தையும் எதிர்மறையாகப் பார்த்து தற்போது சமூகங்களுக்கிடையே காணப்படும் சந்தேகத்தை இல்லாமற் செய்வதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.
நாங்கள் 21 ஆம் திகதி நடந்த சம்பவம் தினத்தில் இருந்து அதிகளவு பாதுகாப்பை முஸ்லிம் பள்ளிகளுக்கே வழங்கி வருகின்றோம். கண்டி மாவட்டத்தில் கணிசமானளவு பள்ளிகளுடைய பாதுகாப்பை முஸ்லிம்களுடன் இணைந்து செய்து வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய மாகாண சமாதான அமைப்பின் ஐ. ஐனூடீன் அவர்களின் நெறியாள்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஷ;nஷய்க் ஏ. எம். சியாம் , சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment