மினுவங்கொடயில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தமது கட்சி முக்கியஸ்தர் மது மாதவவுக்கு எதுவுமே தெரியாது என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
திவுலுபிட்டியவுக்கு வரும் படி வந்த தொலைபேசி அழைப்பொன்றின் பிரகாரம் அங்கு சென்ற மது மாதவ, திரும்பி வரும் வழியிலேயே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்ததனால் காரணத்தைக் கண்டறிய இறங்கி நடந்ததாக கம்மன்பில மேலதிக விளக்கமளித்துள்ளார்.
கம்மன்பிலவின் கூற்றுப்படி, இதற்கான அனைத்து சாட்சியங்களும் இருப்பதாகவும் மதுமாதவ திவுலுபிட்டியவுக்கு அழைக்கப்பட்டதற்கான தொலைபேசி உரையாடல் பதிவும் இருப்பதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment