சிலாபம், வட்டக்கல்லி பகுதியில் தவ்ஹீத் பெயரில் பதிவு செய்யப்பட்ட அமைப்பொன்று இயங்கிய வீடொன்று தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
இன்று சிலாபத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போதே குறித்த இடம் தாக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இயங்கிய மேலும் ஒரு பள்ளிவாசல் மீதும் கல்வீச்சு இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்குள்ளான இடத்திலேயே தற்கொலை குண்டுதாரிகளுள் ஒருவராகக் கருதப்படும் புலஸ்தினி மகேந்திரன் மதம் மாற்றப்பட்டதாகவும் பிறிதொரு பிரிவு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment