பதியதலாவயில் இயங்கும் சில முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு பிரதேசத்தின் இனவாதிகள் எச்சரிக்கை விடுத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.+
வர்த்தக நிலையங்களை மூடி விட்டு ஊர்களுக்குச் செல்லும் படி சிலரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியமுடிகிறது.
சுமார் 45 வருடங்களாக இப்பகுதியில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதுடன் போக்குவரத்து மத்திய நிலையமாக உருவெடுத்துள்ளதால் அங்கு கண்டி - கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகள் பெருமளவில் தரித்துச் செல்லும் வழக்கமும் உண்டு.
குறித்த பகுதியில் பல முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் இயங்குவதோடு பள்ளிவாசலொன்றும் பல காலமாகவே செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment