சிங்கள மருத்துவரென்றால் இப்படி துடிப்பீர்களா? ராஜித அதிரடி கேள்வி! - sonakar.com

Post Top Ad

Monday, 27 May 2019

சிங்கள மருத்துவரென்றால் இப்படி துடிப்பீர்களா? ராஜித அதிரடி கேள்வி!


ஒரு முஸ்லிம் மருத்துவர் என்பதனால் அடுக்கடுக்காக பிரச்சாரங்களை மேற்கொள்ளத் துடிக்கும் நீங்கள் இதுவே ஒரு சிங்கள மருத்துவரின் விவகாரம் என்றால் இத்தனை துடிப்பீர்களா? என கேள்வியெழுப்பியுள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.



இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து குறித்த விவகாரத்தைத் திரும்பத் திரும்ப பேசிய சிங்கள ஊடக பிரதிநிதிகளிடமே ராஜித இவ்வாறு கேள்வியெழுப்பியிருந்தார்.

இதேவேளை, சொத்துக் குவிப்பு விவகாரத்திலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் மருத்துவ ரீதியாக அவர் தவறிழைத்திருக்கிறாரா என்பதை அறிய ஸ்ரீலங்கா மருத்துவ கவுன்சிலின் உயர் மட்ட நிபுணர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment