இனங்களுக்கிடையில் முரண்பாட்டை உருவாக்கக்கூடிய வகையில் பேஸ்புக்கில் பதிவிட்ட நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் பதிவையடுத்தே இன்றைய தினம் சிலாபத்தில் அசாதாரண சூழ்நிலை தோன்றியிருந்ததோடு நகரில் இயங்கி வரும் தவ்ஹீத் அமைப்பொன்றின் கட்டிடம் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு தஃவா அமைப்பின் கட்டிடம் மீதும் கல்வீச்சு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் நாளை காலை வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் பேஸ்புக் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment