முஸ்லிம் சமூகத்துக்குள் நிலவும் உள்வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கத் தாம் உதவத் தயார் என்கிறார் சம்பிக்க ரணவக்க.
கடந்த பத்து வருடங்களாக, தமது சித்தார்ந்தத்தைப் பின்பற்றுவோர் மாத்திரமே இப்பூமியில் வாழத் தகுதியானவர்கள் எனும் போக்கில் வளர்ந்து வந்த தவ்ஹீத் சிந்தனைகளினால் முஸ்லிம் சமூகத்துக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளது. அதனைத் தீர்த்து வைப்பது மாத்திரமன்றி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரபுக் கலாச்சார விழுமியங்களாலும் பல கூறுகளாக உள்ள முஸ்லிம் சமூகம் தமக்குள்ளேயே இதனைப் பேசித் தீர்த்துக் கொள்வது அவசியமாகிறது எனவும் தெரிவிக்கின்ற அவர், இதற்கு தாம் உதவத் தயார் எனவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, 2015 ஆட்சி மாற்றம் ஒரு வகையில் பாரிய சீரழிவுகளைத் தடுத்திருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், பௌத்த அடிப்படைவாதம் பேசுவோர் செய்யும் செயல்கள், ஈற்றில் அதனைக் காரணம் காட்டி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகள் கவர்ந்திழுப்பதற்கே உதவுகின்றன எனவும் இது சிங்கள சமூகத்தாலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
2012 முதல் கடும்போதுக்கு பௌத்த மேலாதிக்க இனவாதம் மற்றும் வன்முறைகளைத் தூண்டுவதில் சம்பிக்கவின் ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து பிறந்த பொது பல சேனாவே முன்னணியில் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment