சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேகரித்துள்ள குற்றச்சாட்டில் கைதாகியுள்ள குருநாகல் வைத்தியரும், அவரது பாரியாரும் மருத்துவர்கள் மாத்திரமன்றி அவர் வேறு தொழிலிலும் ஈடுபட்டு வந்ததால் கூடுதல் வருமானம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கிறார் அமைச்சர் ஹலீம்.
ரிசாத் பதியுதீனின் கட்சி சார்பாக கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருந்த குறித்த நபருக்கு எதிராக திட்டமிட்ட வகையில் போலிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக அவரது தரப்பினர் தெரிவிக்கின்றனர். எனினும், அவர் வேறு விடயத்தில் கைதாகியுள்ளதுடன் தற்சமயம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மூன்று தினங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த மருத்துவர் அரச வைத்தியசாலையில் கடமையாற்றியதற்கு மேலதிகமாக வேறு தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக அமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment