ஈஸ்டர் தாக்குதலையடுத்து அவசரகால சட்டத்தின் கீழ் மல்வானை பகுதிகளில் நேற்றைய தினம் கைதான இரு பெண்கள் உட்பட சுமார் பத்து பேர் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பியகம பொலிசாரினால் நேற்றைய தினம் காலையில் அடையாள அட்டை பிரச்சினை, கைத்தொலைபேசியில் காணொளிப் பதிவுகளை வைத்திருந்தல் உட்பட பல்வேறு காரணங்களுக்காக இக்கைதுகள் இடம்பெற்றிருந்த நிலையில் நேற்றிரவு அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முன்னராக கைது செய்யப்பட்ட பலர் விளக்கமறியலில் வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment