என்டருதென்ன பகுதியில் குடிபோதையில் நண்பர்கள் சிலருடன் வந்த நபர் அப்பகுதியில் கடந்த இரு வருடங்களாக மூடப்பட்டிருக்கும் கடையொன்றை , இன்று மாலை தாக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
குறித்த நபருடன் வந்த நண்பர்கள் இவரின் செயற்பாட்டைக் கைவிட்டு அங்கிருந்து சென்று விட்ட நிலையில் இம்முயற்சி தோல்வியில் முடிந்ததாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதுர்தீன் நானா கடை என அறியப்படும் இடத்திலேயே இம்முயற்சி இடம்பெற்றுள்ளது. பொலிசார் குறித்த நபரைக் கைது செய்துள்ளதுடன் இராணுவமும் அங்கு விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment