பதுரெலிய பாடசாலை அருகில் கைக்குண்டுகளை கைவிட்டுச் சென்ற சம்பவத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்ட மதுசங்கவின் சகோதரனும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த தினம் பாடசாலை அருகில் கைக்குண்டு பொதியொன்றைக் கைவிட்டு விட்டு இருவர் தப்பிச் சென்றதாக பொது மக்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஏலவே மதுசங்க கைது செய்யப்பட்டிருந்தான்.
தற்போது விசாரணைகளின் பின், மதுசங்கவின் சகோதரன் கைது செய்ப்பட்டுள்ளதோடு மேலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment