மஹிந்த ராஜபக்சவின் கூட்டு எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டுபவர்கள் எல்லாம் பதவி விலக வேண்டும் என எந்தத் தேவையுமில்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் தயா கமகே.
தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் தான் பதவி விலகத் தயார் என ஏலவே ரிசாத் தெரிவித்துள்ள நிலையில் அதனை நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு சாதிக்க வேண்டிய அவசியமில்லையெனவும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவரே பதவி விலகுவார் எனவும் தயா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஜுன் மாதம் 18 மற்றும் 19ம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment