சிலாபம்: மைக்குளம் பள்ளிவாசல் உட்பட மூன்று இடங்களுக்கு கல் வீச்சு - sonakar.com

Post Top Ad

Sunday, 12 May 2019

சிலாபம்: மைக்குளம் பள்ளிவாசல் உட்பட மூன்று இடங்களுக்கு கல் வீச்சு


சிலாபத்தில் இன்று ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் பின்னணியில் மைக்குளம் பள்ளிவாசல் உட்பட, குருந்துவத்தை மற்றும் வட்டகல்லிய பகுதியில் இரு ஜமாத்துகள் சார்பில் இயங்கி வந்த பள்ளிவாசல்கள் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.



ஆகக்குறைந்தது இரு வீடுகள் மீது கல்வீச்சு இடம்பெற்றுள்ள அதேவேளை தவ்ஹீத் ஜமாத் பெயரில் இயங்கி வந்த அமைப்பொன்றின் பிரதானியுடைய வர்த்தக நிலையம் மற்றும் வீடு மீதும் கல்வீச்சு இடம்பெற்றுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக் பதிவொன்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டதே பின்னணியென தற்சமயம் நம்பப்படுகின்ற அதேவேளை நகரில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஏலவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment