வன்முறையால் பாதிக்கப்பட்ட மினுவங்கொட பள்ளிவாசலுக்கு உடனடியாகப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்திருந்த 1.5 மில்லியன் ரூபா இழப்பீட்டை இன்று பள்ளி நிர்வாகத்துக்கு வழங்கியுள்ளார் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.
நேற்றை தினம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர், பள்ளிவாசலை மூடி வைத்திராது வழிபாடுகளை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன் திருத்தப் பணிகளுக்கு 1.5 மில்லியன் ரூபா பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், இன்று அதற்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் மாகாணத்தின் 1285 பாடசாலைகளுக்குமான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment