ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற கையோடு சஹ்ரானின் நடவடிக்கையை ஆதரித்து உணர்ச்சி வீடியோ வெளியிட்டு சர்ச்சைக்குள்ளான வவுனியாவைச் சேர்ந்த முனாஜித் மௌலவி என்பவர் இன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த குறித்த நபர் சவுதி அரேபியா சென்றிருந்த நிலையில், நாட்டு நிலவரம் தெரியாமல் உணர்ச்சி வீடியோ வெளியிட்ட நபர், பயங்கரவாத நடவடிக்கைகளை அறிந்த பின்னர் அதற்கு மாற்றாமகவும் கருத்து வெளியிட்டிருந்தார்.
எனினும், ஆரம்பத்தில் வெளியான வீடியோவில் பேசப்பட்ட காரசாரமான கருத்துக்களின் பின்னணியில் குறித்த நபருக்கு 14ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment