பதுரெலிய பாடசாலையொன்றின் அருகிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு - sonakar.com

Post Top Ad

Friday, 24 May 2019

பதுரெலிய பாடசாலையொன்றின் அருகிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு


களுத்துறை மாவட்டம், பதுரெலிய பகுதி பாடசாலையொன்றின் அருகிலிருந்து 13 கைக்குண்டுகள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



பாடசாலை காவலாளியினால் இது தொடர்பில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில் அங்கு விரைந்த இராணுவம் கைக்குண்டுகளை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து நாட்டில் மேலும் ஒரு இனவன்முறையைத் தூண்டி விடும் வகையில் பல இடங்களில் கூரிய ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டும் - அவை பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டும் வரும் சம்பவங்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment