பாதுகாப்பு படையினர் தாம் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகளின் போது செய்தியாளர்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தையடுத்து பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள் மற்றும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சிறு வீட்டுப் பாவனைப் பொருட்களைக் கூட பாரிய ஆயுதங்களாக சித்தரித்து சில இனவாத ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வரும் நிலையில் இவ்வாறு தாமதமான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாட்டினால் முஸ்லிம் சமூகம் பாரிய மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment