ஊரடங்கு சட்டத்தை அமுல் படுத்தி, குருநாகல பகுதிகளில் முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் தாக்குதலுக்குள்ளாகியும் எரியூட்டப்பட்டும் வரும் நிலையில் நாடெங்கிலும் முஸ்லிம்கள் மத்தியில் பதற்ற நிலை தோன்றியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் மௌனம் காத்துவருகின்ற அதேவேளை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டும் அமைதி காத்தும் வருகின்றனர்.
இந்நிலையில், வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அச்சம் சூழ்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment