யாழ், கொக்குவில் பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் அப்பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதி இன்று காலை சுற்றி வளைக்கப்பட்டு இடம்பெற்ற தேடலில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் தேடலின் போது வட பகுதியில் ஆங்காங்கு இவ்வாறு கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment