முஸ்லிம்கள் இந்து சமுத்திர அனாதைகளல்ல அவர்கள் எங்கள் தமிழ் மொழி குடும்ப உறவுகள்.
மதச்சார்பற்ற இணைபாட்ச்சி இலங்கை மட்டும்மே எமது தாய்நாடு.
சிங்கள பெளத்த காடையர்கள் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிரான கொன்று சூறையாடும் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். முஸ்லிம்கள் இந்து சமுத்திரத்தின் அனாதைகளல்ல. அவர்கள் எங்கள் தமிழ் மொழிக் குடுபத்தைச் சேர்ந்தவர்கள்.
1915,1956,1958,1977,1983 என தொடர்ந்த சிங்கள பெளத்த காடையர்களின் இனரீதியான கொலைகளும் சூறையாடலும் மீண்டும் ஆரம்பித்துள்ளது. வடகிழக்கு தமிழ் பகுதிகளுக்கும் மலையக தமிழ் பகுதிகளுக்கும் வெளியே முஸ்லிம்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லை. எங்கள் பிள்ளைகள் இவற்றை கூர்ந்து நோக்குகிறார்கள்.
வடகிழக்கின் பிள்ளைகள் மதச்சார்பற்ற இணைபாட்ச்சி இலங்கையை மட்டுமே தங்கள் தாய்நாடாக ஏற்றுக்கொள்வார்கள். எமது பிள்ளைகளுக்குள்ள ஒரே தெரிவு மதச்சார்பற்ற இணைபாட்ச்சி இலங்கை அல்லது சுதந்திரத்தைக் காக்க நட்பார்ந்த வெளிநாடுகளின் உதவியை நாடுவது.
கடந்த காலத்தில் பிரபாகரன் தமிழரது சுய நிர்ணய உரிமைக்கு மேலாக இலங்கை தீவின் இறமையை மதித்தார். அதனால் அவர் 1987ல் இலங்கைத் தீவின் இறைமையை காப்பாற்ற சிங்களவருக்கு துணைநின்றார். அவர் சிங்களவரை சரணாகதியில் இருந்து தப்பிக்க உதவினார்,
முன்னைநாள் ஜனாதிபதி பிரேமதாசா பிரபாகரன் எங்கள் வீர கதாநாயகன் என்று பாராட்டினார். பின்னர் பிரபாகரன் தனக்கு வாக்களிக்கபட்ட வடகிழக்கின் சுயநிர்ணய உரிமையை கோரினார். அதானால் பிரபாகரன் தான் காப்பாற்றிய அதே சிங்கள பெத்த சித்தாந்திகளால் கொல்லபட்டார்.
பிரபாகரன் என்கே தவறு செய்தார் என்கிற வரல்லாற்றுக் கேழ்வி எங்கள் முன் எப்பவும் இருக்கும். எங்கள் பிள்ளைகள் எம்மைவிட அறிவார்ந்தவர்கள். மதச்சார்பின்மையும் உள் சுயநிர்ணய உரிமையுமுள்ள இலங்கை மட்டுமே எங்கள் பிள்ளைகளின் தாய்நாடாக இருக்கும். அல்லது பிரபாகரன் தவறு இன்னொருமுறை எங்கள் வரலாற்றில் இடம்பெறாது.
-கவிஞர் ஜெயபாலன்
No comments:
Post a Comment