என். எம். அமீனின் கூற்றைத் திரிபுபடுத்தி இனவாதம் கக்கும் ஹிரு - sonakar.com

Post Top Ad

Friday, 10 May 2019

என். எம். அமீனின் கூற்றைத் திரிபுபடுத்தி இனவாதம் கக்கும் ஹிரு


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையில், முஸ்லிம் அரசியல்வாதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் வைத்து, முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம் அமீன் தெரிவித்த கருத்தின் ஒரு பகுதியை ஹிரு தொலைக்காட்சி, தமக்குத் தேவையான வகையில் திரிபுபடுத்தி தனது இனவாதத்தை அரங்கேற்றியுள்ளது.



ஒவ்வொரு வீடுகளிலும் பெண்களின் பாதுகாப்பு கருதி வாள் இருப்பதாகவும் அவற்றையெல்லாம் ஆயுதம் என சித்தரித்து கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்த கூற்றை என்.எம். அமீன் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அதில் ஜனாதிபதியெனும் வார்த்தையை நீக்கி, அக்கூற்று அமீனின் கூற்று போன்று குறித்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதனை அடிப்படையாக வைத்து பல சிங்கள இணைய ஊடகங்கள் பாரிய அளவில் இனவாத பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment