
ஈஸ்டர் தாக்குதலையடுத்து தொடரும் சோதனை நடவடிக்கைகள் ஊடாக நேற்றும் பல இடங்களில் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இச்சூழ்நிலையில், பள்ளிவாசல்துறை பகுதியில் அரபு எழுத்துக்களுடனான புத்தர் சிலைப் படங்கள், ஆவணங்களுடன் தவ்ஹீத் அமைப்பொன்றினால் இயக்கப்பட்டு வந்த பள்ளிவாசலின் நிர்வாகி மற்றும் மௌலவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
40 முதல் 45 வயதுக்குட்பட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு கல்பிட்டி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment